பொள்ளாச்சி RTO அலுவலகத்தால் எங்களுக்கு இடையூறு! - மக்கள் குற்றச்சாட்டு..!
-MMH
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தினந்தோறும் தகுதி சான்றிதழ் பெற பஸ், லாரி, டெம்போ, கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன இந்த வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்வதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக ரமணா நகர், குமாரசாமி லே-அவுட் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments