ராமநாதபுரம் பகுதியில் விண்கல்!! - மக்கள் பரபரப்பு!!
-MMH
ராமநாதபுரம்: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் பகுதியில் விண்கல் விழுந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் ரத்தினம் என்பவரின் வீட்டருகே நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர சத்தம் கேட்டது. காலையில் எழுந்து பார்த்தபோது தோட்டத்தில் விசித்திரமான கல் ஒன்று கிடந்தது. இது விண்கல்லாக இருக்குமோ என அவருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த கல்லை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரத்தினம் கூறுகையில், "நள்ளிரவு திடீரென பலத்த சத்தம் கேட்டநிலையில், காலையில் பார்த்தபோது வித்தியாசமான கல் ஒன்று கிடந்தது.
முதல்முறையாக அதை தொட்டபோது மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. விண்ணிலிருந்து இந்த கல் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
-சுரேந்தர்,கோவை கிழக்கு.
Comments