பெண் தீக்குளிக்க முயற்சி!! - தடுத்து நிறுத்திய போலீஸ்!!
-MMH
கோவை மாவட்டம், காரமடையைச் சேர்ந்தவர் சித்ரா (20). இவர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் திங்கள்கிழமை வந்துள்ளார்.
அப்போது, ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை போலீஸார் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த அந்தப் பெண் கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், பெற்றோர் இல்லாததால் கடந்த மூன்று மாதத்துக்கு உறவினர்கள் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சித்ராவை திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், ரூ.50 ஆயிரம் வரதட்சணை கேட்டு கணவர் சித்ராவை துன்புறுத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதும் தெரியவந்தது.
-கிரி,கோவை மாவட்டம்.
Comments