கும்பகோணம் நகராட்சி தீவிர கண்காணிப்பு!! - போலீசாருக்கு மக்கள் பாராட்டு!!
-MMH
கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று டெல்டா மாவட்டங்கள் அதிகம் பேர் பாதிப்பு அடைகின்றன. தஞ்சாவூர்,கும்பகோணம்,திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை அனைத்து வகையான நகராட்சிகளும் நோய்த்தொற்றை விரட்டி அடிப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அவற்றின் ஒரு பகுதியாக கும்பகோணம் நகராட்சியின் மையப் பகுதிகளில் நகராட்சி ஊழியர்களின் துணையோடு போலீஸ் உதவியுடன் மையப்பகுதியில் காலை மதியம் மற்றும் இரவு நேரங்களில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் வரும் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் அனைத்து வாகனங்களிலும் வருபவர்களை கண்காணித்து முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.முகக் கவசம் அணியாமல் வரும் அனைவருக்கும் ரூபாய் 200 வீதம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.இன்று காலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் பெரிய கடை வீதி காந்தி பார்க் மீன் மார்கெட் போன்ற பகுதிகளில் இன்று காலை முதலே தீவிர கண்காணிப்பில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் மத்தியில் போலீசார் மற்றும் நகராட்சி ஊழியரின் சேவைகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-வினோத்குமார்,கும்பகோணம்.
Comments