கோவையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்!! - வாகனங்கள் பறிமுதல்!!

       -MMH


       கோவையில் இனி மது குடித்து விட்டு  ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிரித்திங் அனலைசரில் ஊதச்சொல்லி பரிசோதனை செய்ய முடியவில்லை.


  இதற்கு காரணம் ஊதும்போது கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து இன்று வரை பிரித்திங் அனலைசர் கொண்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக,மது குடித்து விட்டு ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக  அமலாகியுள்ளது.


-நம்ம ஒற்றன்.


Comments