தமிழக தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு!! - புதிய வாகனம் விற்பதில் கிடுக்குப்புடி..!

 


         -MMH 


தமிழக கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது......!!!


           பதிவு செய்யாத புதிய இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை.மத்திய மோட்டார் வாகன சட்டப்பிரிவு 1989,-சட்டம் (4),ன் படி, அங்கீகரிக்கப்பட்ட  விற்பனையாளர்கள்,வாடிக்கையாளர்களுக்கு (RTO) பதிவு செய்யாமல்,தற்காலிகமாகவோ,நிரந்தரமாகவோ தரக்கூடாது இந்த உத்தரவை மீறும் விற்பனை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


         அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தவிர மற்ற யாரும் புதிய இரண்டு சக்கர வாகனங்கள் விற்க கூடாது. (மல்ட்டி பிராண்டு) எனப்படும் பலதரப்பு புதிய வாகனங்கள் விற்கும் கடைகளில் இனி புதிய வாகனங்கள்,விற்க கூடாது.அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள்,பதிவு செய்யாத புதிய வாகனங்களை தனி நபருக்கோ,நிதி நிறுவனங்களுக்கோ,தரக்  கூடாது மீறினால் (TCR) எனும் வர்த்தக சான்றிதழ் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக,மத்திய மோட்டார் வாகன விதிகள்படி 1989 ன்,சட்ட பிரிவு (44)வது விதியின் கீல் நீக்கப்படும்.


          வட்டார போக்குவரத்து (RTO) அதிகாரிகள் மாதாமாதம் 5ம் தேதி தணிக்கை செய்ய வேண்டும்,கண்டிப்பாக இந்த உத்தரவுகளை நடைமுறை படுத்த வேண்டும் என தமிழக கூடுதல் தலைமை செயலாளர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 


-நம்ம ஒற்றன்.   


Comments