கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும்!! - கோவை ஆட்சியர் உத்தரவு!!
-MMH
கோவை தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தனியார் ஆய்வகங்களுக்கு ஆட்சியர் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியார் ஆய்வகப் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது. கோவையில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுவர்களிடம் நோய்களின் தன்மைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் பரிசோதனைகளின் முடிவுகளை தாமதமின்றி வழங்க வேண்டும். அவர்களின் விவரங்களை சுகாதாரத் துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
அனைவருக்கும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை ஆர்டிபிசிஆர் முடிவுகள் வருவதற்கு முன்பே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று பரவல் நடவடிக்கையில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
-ஈஷா,கோவை.
Comments