ஆச்சரியம் ஆனால் உண்மை!! - திருப்பூரில் மருத்துவமனை அதிசயம்!!
-MMH
பொதுமக்களே நமது தமிழ்நாட்டில் பல தொழில் மாவட்டங்கள் இருந்தாலும் திருப்பூர் மாவட்டம் என்பது உலக அளவில் பேசப்பட்ட ஒரு மாவட்டமாக இருக்கிறது. காரணம் பனியன் மற்றும் உள்ளாடைகள் தயாரிக்கப்படும் பெரிய நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. வெளிநாட்டினரும் வியந்து பார்க்கின்றனர்.இந்த சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மனிதனை வாட்டி வதக்கி கொண்டிருக்கும் கொடிய நோயான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் (Dialysis) என்று ஒரு மருத்துவ சிகிச்சை உள்ளது.
அந்த சிகிச்சைக்கு ஒரு எளிய முறையை திருப்பூரில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் டயாலிசிஸ் மையம் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருப்பூர் மாவட்ட ஆசிரியர் விஜய கார்த்திகேயன் அவர்களால் திறக்கப்பட்டது.இனி ₹375 டயாலிசிஸ் ரூபாய்க்கு செய்யலாம்.இது போல ஒரு வசதியை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு திருப்பூர் நகரில் ஏற்பாடு செய்த திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்க டயாலிசிஸ் மையத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-கிரி,கோவை மாவட்டம்.
Comments