பொள்ளாச்சி காந்தி சிலை அருகே குறுகல் சாலையால் போக்குவரத்து பாதிப்பு..!

     -MMH


பொள்ளாச்சி காந்தி சிலையிலிருந்து பெரிய பள்ளிவாசல் வழியாக உடுமலை ரோடு மரப்பேட்டை வரையிலும் ரோடு குறுகலால் தினமும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.


     இதையடுத்து, நகரில் போக்குவரத்து மிகுந்த ரோட்டை விரிவாக்கம் செய்ய கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, உடுமலை ரோடு பகுதியில் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. மேலும் தனியார் கட்டிடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களும் அகற்றும் பணி நடந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் பல மாதமாக அப்பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் மீண்டும் ரோடு விரிவாக்கத்திற்கான பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



     இதன் ஒரு பகுதியாக, கோவை ரோடு நல்லப்பா தியேட்டர் அருகேயிருந்து உடுமலை ரோட்டை சந்திக்கும் பகுதியில் உள்ள பழைய நகராட்சி பள்ளி வரையிலும் உள்ள மரங்கள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


   நேற்று, நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட கோவை ரோட்டோரம் உள்ள பல்வேறு மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது. இதற்காக சுமார் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள், மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, கை அறுவை இயந்திரத்தை பயன்படுத்தி வெட்டி, பொக்லைன் கொண்டு சாய்த்தனர். முதற்கட்டமாக, நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட இடத்தில் உள்ள சுமார் 19 மரங்கள் வெட்டப்படுகின்றன. அடுத்து, தனியார் வணிக வளாகங்கள் முன்பு உள்ள மரங்களை வருவாய்த்துறையினர் மூலம், வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


-சோலை, சேலம்.ஹரிகிருஷ்ணன்.


Comments