தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போது இல்லை!! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
-MMH
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக மேற்குறிப்பிட்ட 4 மாநில தலைமைச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து, தேர்தல் ஆணையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், காலியாக உள்ள இதர நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநில சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரி,கோவை மாவட்டம்.
Comments