கேரளம் ஆலப்புழாவில் தள்ளாடும் படகு வீடுகள்!! -கொரோனா ஊரடங்கால் பல கோடி இழப்பு.!!

     -MMH


     கேரளம் ஆலப்புழாவில் தள்ளாடும் படகு வீடுகள் ஐந்து மாதங்களில் பல கோடி இழப்பு.


     சுற்றுலா சொர்க்கம் 'தெய்வத்தின்றே சொந்த பூமி' (கடவுளின் தேசம்) என அழைக்கப்படும் கேரளம், சுற்றுலா தலங்கள் மலர்ந்து கிடக்கும் இயற்கை தாயின் வரம்பெற்ற பகுதி.ஆண்டு முழுவதுமே இங்குள்ள சுற்றுலா தலங்கள் மக்களை கவர்ந்து வருகின்றது வழக்கம்.


     கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் 5 மாதங்களுக்கு மேலாக கேரளாவில் சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து போயுள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். கேரளாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும் ஆலப்புழா மற்றும் கோட்டயம் குமரகத்தில் உள்ள படகு இல்லம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.



     இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிவது தான் வழக்கம். ஆலப்புழா மற்றும் குமரகத்தில் சுமார் 1,500 படகுகள் இயங்கி வருகின்றன.ஆனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஆலப்புழா மற்றும் குமரகம் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த ஐந்தரை மாதங்களில் தங்களுக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறுகின்றனர்.


-அருண்குமார் கோவை மேற்கு.


Comments