பல்வேறு சிக்கல்களுக்கிடையிலும் ஒற்றுமையுடன் ஓணம் பண்டிகை!!
-MMH
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மலையாள தமிழ் மக்கள் இடையே கோலாகலமாக களைகட்டிய ஓணம் பண்டிகை கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல இ - பாஸ் , மற்றும் பூ, பழங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு இடையிலும் வருமானம் குறைவாக கால் இருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் மிகவும் உற்சாகமாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தங்கள் வீட்டு வாசலில் வண்ண வண்ண மலர்களால் அத்த கோலம், பூ கோலம், உள்ளிட்ட பல்வேறு விதமான கோலங்கள் இட்டும் 18 க்கும் மேற்பட்ட பொரியல் வகையுடன் சமைத்து அக்கம்பக்கம் உள்ள உறவுமுறைகளை அழைத்து உணவு பரிமாறி மகிழ்ச்சி அடைத்தனர்.
மேலும் தூரமாக இருக்கும் உறவுகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாகும் மற்றும் வீடியோ அழைப்பு மூலமாகவும் தங்கள் வாழ்துக்களையும் , அன்பையும் பரிமாறி வருகின்றனர் மக்களின் இறுகிய மனதை கொஞ்சம் குளிர்மை செய்யும் விதமாக ஜாதி, மத ,இன,மொழி வேறுபாடு கடந்து அனைவரும் ஒன்றாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருவதை காண்போரை மகிழ்விக்கும் விதமாக அமைந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
- V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments