தனியார் பேருந்துகள் இயக்க உரிமையாளர்கள் இன்று ஆலோசனை!!

     -MMH


     தனியார் பேருந்துகள் இயக்க உரிமையாளர்கள் இன்று ஆலோசனை. தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பேருந்து இயக்குவது தொடர்பாக திங்கள்கிழமை(இன்று)தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.


    பொது முடக்கத்துக்கு முன், தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொது முடக்கம் காரணமாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தளர்வளிக்கப்பட்ட போது குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டன இந்நிலையில் தற்போது அரசு மீண்டும் தனியார் பேருந்துகளை முழுவதுமாக இயக்க அனுமதி அளித்துள்ளது ஆனால், மாவட்டத்துக்கு வெளியே பேருந்துகளை இயக்க அனுமதியில்லை. இதன் காரணமாக புகர்ப் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க முடியாது. இவ்வாறு மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகளை இயக்கினால், அதிகளவு நஷ்டம் ஏற்படும். எனவே, பேருந்து இயக்குதல் குறித்து முடிவு செய்வதற்காக திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் முடிவெடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


-அருண்குமார்,கோவை மேற்கு.


Comments