கோவை மாநகரில் மீண்டும் இரவு நேர கொள்ளையர்கள் கைவரிசை.
-MMH
கோவை மாநகரில் மீண்டும் இரவு நேர கொள்ளையர்கள் கைவரிசை.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம். பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக அங்குள்ள காவல் துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சரோஜினி என்பவர்,அவருடைய வீட்டிலிருந்து கடந்த திங்கட்கிழமை அன்று 10 பவுன் நகைகளை கொள்ளை அடிக்கப்பட்டதாக நரசிம்மநாயக்கன்பாளையம் காவல்நிலையத்திற்கு புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் 3 மர்ம நபர்கள் இரவு நேரங்களில் சுற்றி வருவது பதிவான காட்சிகளை சேகரித்தார்கள்.சரோஜினி வீட்டில் திருடியவர்கள் இவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் சிசிடிவி காட்சி பதிவு அடிப்படையில் திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் சென்ற மாதம் கோவையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் டவுசர் அணிந்தவாறு சில கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது அதில் ஒருவனை பிடித்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் கோவை மாவட்டத்தில் அடிக்கடி நிகழ்வதால் அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். இதுபோன்ற திருட்டுச் சம்பவம் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.
-ஈஷா,கோவை.
Comments