மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக சிறையில் ஈட்டிய பணத்தில் செல்ஃபோன் வாங்கிவிட்டேன்!!
-MMH
வட சத்தீஸ்கரைச் சேர்ந்த அம்பிகாபூர் ஆம்தார்ஹா கிராமத்தில் 15 ஆண்டுகள் கழித்து சிறைதண்டனை முடிந்து குடும்பத்துடன் ஒன்றிணைந்த ஆனந்த் நாகேஷ்யா, ஆன்லைன் வகுப்புகளுக்காக தனது மகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கி அளித்துள்ளார்.
2005-ஆம் ஆண்டு குடும்ப தகராறில் தாய்மாமனைக் கொலை செய்த நாகேஷ்யா, சிறையில் நன்னடத்தை காரணமாக 15 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு பரிந்துரைக்கப்பட்டு வெளிவந்திருக்கிறார்.
சிறைக்கு செல்லும்போது ஒரு வயதே நிறைவடைந்த மகளை, இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திப்பதில் அளவற்று மகிழ்ந்திருக்கிறார்.
”ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாமல், என் மகள் படும் சிரமத்தைப் பார்த்தேன். சுற்றி இருப்பவர்களிடம் சென்று என் மகள் கோரிக்கை வைப்பதை என்னால் பார்க்கமுடியவில்லை. சிறையில் ஈட்டிய பணத்தில் செல்ஃபோன் வாங்கிவிட்டேன். என் மகள் மருத்துவம் படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்” என்று நாகேஷ்யா தெரிவித்திருக்கிறார்.
என் குடும்பத்துக்கு இருக்கும் சொற்ப நிலத்தில், விவசாயத்தில் ஈடுபட்டு எங்களின் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் நாகேஷ்யா.
-பீர் முஹம்மது,குறிச்சி.
Comments