ரஜினி படத்திற்கு இப்படியொரு சோகமா!!- டி.ஆர்.பி.ரேட்டிங்கில் பின்னடைவு.!!
-MMH
ரஜினி படத்திற்கு இப்படியொரு சோகமா? ................ யாருகிட்ட அடி வாங்குது பாருங்க! டி.ஆர்.பி. ரேட்டிங்கில்,
பிரபல டி.வி சேனல் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 15ம் சுதந்திர தினத்தன்று சமீபத்தில் வெளி வந்த ரஜினி நடித்த 'தர்பார்' இரண்டாவது முறையாக ஒலிபரப்பானது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் சுத்தமாக விரும்பவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் ஆதாரத்துடன் வெளியானது. அது டி.ஆர்.பி. ரேட்டிங் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்திய டி.ஆர்.பி. ரேட்டிங்கில், தர்பார் திரைப்படம் 90 லட்ச புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'திமிரு பிடிச்சவன்' படம் 122 லட்ச புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.மிகவும் சொற்பமான முதலீட்டில் எடுக்க பட்ட படம். ரஜினியின் மார்க்கெட் பெரும் அளவில் இறங்கு முகத்தில் உள்ளது. மேலும் இளம் பெண்கள். குழந்தைகள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று இதன் மூலம் தெரிகிறது.
-ஸ்டார் வெங்கட்.
Comments