இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம் -பொதுமக்களுக்கு எச்சரிக்கிறார் வைரமுத்து!!
-MMH
இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம்
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து சேவை தொடக்கம் என அனைத்திலும் அரசு தளர்வு அளித்துள்ளது. இந்த தளர்வு காலத்தில் பாதுகாப்பாக பத்திரமாக இருங்கள் என்று கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊராடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.பொது மக்களுக்கு எச்சரிக்கும் வகையில் இருக்கும் அவரின் கவிதை:
"ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.
மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!
இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம்."
என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
- B.செந்தில் முருகன், சென்னை தெற்கு.
Comments