வானில் பறந்த ஆட்டோ ஓட்டுநர்-பார்த்த பெண் படுகாயம்.!
-MMH
யாராலும் அவ்வளவு எளிதாக நம்பவே முடியாத ஒரு காட்சி இது.பெங்களூர் நகரில், சிசிடிவியில் பதிவாகிய அந்த காட்சி, தற்போது வைரலாக சுற்றி வருகிறது. நெரிசலான சாலையில் நடந்து செல்லும் போது, நடந்து செல்பவர் மீது ஆட்டோ மோதுவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆனால் ஆட்டோ பக்கத்தில் நின்றுகொண்டிருந்த, ஆட்டோ டிரைவர் திடீரென, பல அடி தூரத்துக்கு பறந்து சென்று, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்து, அவருக்கு 52 தையல்கள் போடப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பார்க்கவே திகிலை ஏற்படுத்துகிறது அந்த சிசிடிவி வீடியோ.
பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ளது கிருஷ்ணராஜபுரம். இந்த ஏரியாவில் உள்ள தம்புச்செட்டிபாளையா (டிசி பாளையா) என்ற பகுதியில்தான் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. பறந்து வந்தவர் ஆட்டோ டிரைவர்.அதனால் பாதிக்கப்பட்டு 52 தையல்கள் போடப்பட்டவர் 42 வயதாகும் பெண்மணி சுனிதா.வயரை இழுத்த பைக், இத்தனைக்கும் காரணம் சாலையின் குறுக்கே கிடந்த ஒரு வயர். வேகமாக சென்ற ஒரு டூவீலர் அந்த வயரை தனது டயரால் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரின், கால்களில் வயர்பட்டு அவரை சட்டென இழுத்துச் சென்றுள்ளது. இழுத்த வேகத்தில் வயர் மீது வழுக்கியபடியே போயுள்ளர். தரையிலிருந்து சுமார் பத்தடி உயரத்தில் வழுக்கியபடி அவர் சென்றது, பார்ப்பதற்கு பறப்பது போலவே இருந்தது. பறந்து சென்ற ஆட்டோ டிரைவர்ரோப்கார் என்று கூறுவோமே, அதில் கம்பியின் கீழே, மக்கள் பயணிக்க கூடிய அளவுக்கு கூண்டு மாதிரி தயார் செய்திருப்பார்கள். அது கம்பியில் வழுக்கிக் கொண்டே செல்லும். ஆனால் இங்கு வயர் மீது ஆட்டோ டிரைவர் வழுக்கியபடி பல அடி தூரத்துக்கு பறந்து வந்துள்ளார்.
அப்படி வந்தவர், அங்கே நடந்து சென்று கொண்டிருந்த சுனிதா என்ற பெண்மணி மீது மோதினார். நிலைகுலைந்த சுனிதா தலை குப்புற விழுந்தார். பெண் மீது மோதல் இதன்பிறகு ஆட்டோ டிரைவர் மேலும் சில அடி தூரம் உருண்டு சென்று விட, இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியாமல் அடிப்பட்ட வேதனையில் துடித்தனர். அதிர்ஷ்ட வசமாக சுனிதாவின் கணவரான கிருஷ்ணமூர்த்தி என்ற சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டர், அருகே பணியாற்றிக்கொண்டு இருந்தார். அங்கேயிருந்தவர்கள் விஷயத்தை சொல்ல, அவர் ஓடி வந்து சுனிதாவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு 52 தையல்கள் போடப்பட்டன. நல்லவேளையாக சுனிதா உயிர் தப்பினார். ஆட்டோ டிரைவர் லேசான காயங்களுடன் தப்பி உள்ளார். பயத்தில் பெண்இதுபற்றி சுனிதா கூறுகையில், நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென அருகே இருந்தவர்கள் எனது பெயரை சொல்லி கத்தினார்கள். ஒரு பக்கம் பயம், மறுபக்கம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திரும்பி பார்த்தேன். அப்போது எனது பின்னால் ஒரு நபர் பறந்து வந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறக்கும் காட்சியை போல அது இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் என் மீது வந்து விழுந்து விட்டார். நானும் கீழே விழுந்தேன். என்ன நடக்கிறது என்பது புரியவில்லை . எனது கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. என்னால் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே உட்கார்ந்து விட்டேன்.., என்று அந்த திகில் சம்பவத்தை தெரிவிக்கிறார் சுனிதா.
சிசிடிவி காட்சிகள் இந்தச் சம்பவம் ஜூலை 16ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நடந்துள்ளது. ஒருவழியாக சிகிச்சை முடித்து சுனிதா வீடு திரும்பிய பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்த்து உள்ளார் கிருஷ்ணமூர்த்தி. அப்போதுதான் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி அவருக்குத் தெரிய வந்துள்ளது. சுனிதா அந்த பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதி மக்களுக்கு அவர் பரிச்சயமானவர். எனவே உடனடியாக உதவி கிடைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது.சாலையில் வயர்கள் பெங்களூரில் ஆங்காங்கே இணையதள வயர்கள், சாட்டிலைட் கேபிள் வயர்கள் கிடப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி, கடந்த வருடம் மாநகராட்சி பைபர் கேபிள்களை கட் செய்து விட்டது. இதனால் இணையதள சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு மறுபடியும் இணையதள கேபிள்களை கட் செய்வதற்கு மாநகராட்சி, ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
-ஈஷா,குறிச்சி கோவை.
Comments