மனிதாபிமானம் இல்லாதா மனிதர்கள்!!
-MMH
பொள்ளாச்சி தமிழக, கேரள எல்லை பகுதியான நெடும்பாறை அருகே மீனாட்சிபுரம் சாலையில் அடையாளம் தெரியாத நபர்களால் பிறந்த சில தினங்களே ஆன ஆண் கன்று குட்டியை சாக்கில் கட்டி ரோட்டில் வீசி சென்றுள்ளனர் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயி நம்மிடம் கூறும்போது நமது பகுதியில் விவசாயிகள் முதல் கூலிக்கு செல்வோர் வரை அவரவர் தகுதிக்கு உட்பட்டு மாடுகள் வைத்துள்ளனர் மாடுகள் கர்ப்பமாகி பிரசுரிக்கும்போது நல்ல அழகான பெண் கன்று என்றால் அதை நல்ல முறையில் வளர்த்தவர்கள் அதே ஆண் கன்று என்றால் உடனே தாயிடமிருந்து பிரித்து விடுவார்கள் நடக்க முடியாமல் இருக்கும் கன்றை சிறிது தூரம் இழுத்து செல்வார்கள் அப்படிப்பட்ட நேரங்களில் கன்றுகள் இறக்க அதிக வாய்ப்புள்ளது அதுபோல் கன்றுகளும் இறந்தும் உள்ளன அப்படிப்பட்ட நேரங்களில் மாடு அறுக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட அவர் உடனே வந்து சில நூறு ரூபாய்கள் கொடுத்து வாங்கிக் கொள்வார் அப்படி வாங்கி செல்லும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்திருக்கலாம் என்றார்.
மேலும் சிறிய அளவிலான வாகனங்களில் அளவுக்கதிகமான கன்று குட்டிகளை ஏற்றிச் செல்லும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு நகர்ந்து கூட நிற்க முடியாமல் கன்றுகள் இறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார் மற்றொரு நபர் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்.
நாளைய வரலாறு பத்திரிக்கையின் சார்பாக அருகிலிருந்த ''ஜி கே குமரேஷ்'' அவர்களிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மறுப்பு ஏதும் சொல்லாமல் அந்த கன்று குட்டியை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது நாளை வரலாறு பத்திரிக்கையின் சார்பாக அவருக்கு ஒரு சல்யூட்.
எல்லா உயிரும் தம்முயிர் தான் என்ற சிந்தனையோடு,
-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.
Comments