செய்தியாளர் மரணத்திற்கு நாளையவரலாறு இதழ் இரங்கல்!

                     -MMH


தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1939 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 51699 ஆக உயர்ந்துள்ளது இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அவரை இழந்த குடும்பத்தினருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நாளைய வரலாறு புலனாய்வு இதழின் ஆசிரியர் வெளியீட்டாளர் நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் நிருபர்கள் சார்பாக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம் அதேசமயம் பத்திரிக்கை துறையில் முதலும் கடைசியுமாக இவரது இழப்பு இருக்கட்டும், நண்பர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பணியாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு நாளைய வரலாறு புலனாய்வு இதழின் ஆசிரியர்:


-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்


Comments