பொள்ளாச்சியில் கொரோனா பீதி!! வணிகர்கள் தானாக முன்வந்து கடை அடைப்பு..!
-MMH
பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த கோட்டூர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், கோட்டூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா, வட்டாட்சியர் வெங்கடாச்சலம், வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், ஆனைமலை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கோட்டூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து கிருமிநாசினிகள் தெளித்து காவல் நிலையத்திற்கு சீல் வைத்தனர்.
அங்கு பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் பரிசோதித்ததில் உதவி ஆய்வாளர் அவரது மகன் மனைவி ஆகியோருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது மேலும் சுகாதாரப் பணியாளர் ஒரு பொண்ணுக்கும் நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது இதனால் மக்கள் யாரும் காவல் நிலையம் பக்கம் செல்ல பயப்படுகின்றனர் கோட்டூர் பகுதியில் நோய் தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தால் கோட்டூர் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தானாக முன்வந்து ஒருவாரத்திற்கு கடைகள் திறப்பதில்லை என்று முடிவெடுத்து உள்ளார்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள் இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது.
நோய்த்தொற்று அதிகரித்தால் தனிமைப்படுத்தும் நாட்கள் அதிகரிக்கப்படும் மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் நோய்தொற்று பரவலை தடுக்க முக கவசம் அணிந்து சமூக விலகலை பின்பற்ற வேண்டும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரவேண்டுமென தாசில்தார் வெங்கடாசலம் கூறினார்.
-பொள்ளாச்சி M.சுரேஷ் குமார்.
Comments