போத்தனூரில் பரபரப்பு! பச்சிளம் குழந்தை முள் புதரில்..!

                 -MMH


கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் செல்லும் சாலையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மர்ம நபர்கள் ஒரு பேப்பரில் சுத்தி வீசி சென்றுள்ளார்கள்.


 


இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக போத்தனூர் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் குழந்தை யாருக்கு பிரசவித்தது இதற்கு யார் காரணம் குழந்தையை போட்டு சென்றதற்கான காரணம் என்ன என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர் மேலும் இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால்? எவ்வித தயக்கமுமின்றி போத்தனூர் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் தகவல் தெரிவிப்போர்  பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றனர்.


இது தொடர்பாக வெள்ளலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூல்நிலைமை காணப்பட்டது.


-பீர் முஹம்மது,திருப்பூர்,ஈஷா,குறிச்சி.    


Comments