மரண சாலை- விபத்து பீதியில் பொதுமக்கள்..!
-MMH
தமிழகத்திலிருந்து தினந்தோறும் கேரளாவிற்கு நூற்றுக்கு அதிகமான டாரஸ் என்னும் கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமான கருங்கற்களை ஏற்றிக்கொண்டு தமிழக கேரள எல்லையான கோபாலபுரம் சுங்கம் பகுதியிலிருந்து நெடும்பாறை, முத்துசாமிபுதூர், ராமர் பண்ணை , மற்றும் மீனாட்சிபுரம் வழியாக செல்கிறது ரோடுகளில் இந்த வண்டிகள் ஆக்கிரமித்து அதிவேகமாக செல்வதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனே செல்கிறார்கள் கொரோனோ நோய்த்தொற்றின் காரணமாக குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் எதிர்பாராவிதமாக குழந்தைகள் ரோட்டுக்கு வந்தால் நிலை என்னாகும் என மக்கள் அச்சப்படுகின்றனர் மக்கள் அச்சப்பட காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருங்கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த ஒரு டாரஸ் வண்டி ஒரு நாயை சர்வசாதாரணமாக மோதி சென்றது சம்பவ இடத்திலே அந்த நாய் பரிதாபமாக இறந்தது.
இந்நிலையில் ரோட்டோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு பகலாக இந்த வாகனங்கள் செல்வதால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்கிறார்கள் மேலும் ஒருவர் கூறுகையில் இது தமிழக கேரள அரசியல்வாதிகளின் செல்வாக்கோடு நடைபெறுவதால் யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை என்றும் தட்டு கேட்போருக்கு காந்தியை கொடுத்து மடக்கி விடுவார்கள் என்றும் கூறினார். கருவறை முதல் கல்லறை வரை பணம் தேவைதான் ஆனால் பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு உலகம் சென்று விட்டது என்கிறார்கள் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்.
-பொள்ளாச்சி M சுரேஷ்குமார்.
Comments