கொரோனா தொற்று-சமூக இடைவெளியை பின்பற்றாத வங்கி!
-MMH
பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த கோட்டூர் பகுதியில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் ஒரு வார காலத்துக்கு வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர்.
இன்று கோட்டூரில் வங்கி முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருசிலரே முக கவசம் அணிந்து கூட்டமாக நின்று இருந்ததை கண்டு அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர் அங்குள்ள வணிகர்கள் மேலும் இதனால் நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் மக்களுக்காக நாங்கள் கடைகளை அடைத்து இருக்கும் நிலையில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்களே எப்படி நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது என்கிறார்கள்.
அனைத்து கடைகளிலும் வணிக நிறுவனங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் முக கவசம் அணிய வேண்டும் கிருமிநாசினி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் வங்கிகளுக்கு மட்டும் இது விதிவிலக்கா என்று கேள்வியும் எழுப்புகிறார்கள்.
முகக் கவசம் உங்கள் உயிரை காக்கும் என்ற சிந்தனையோடு,
-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.
Comments