கோவையில் கஞ்சா வாலிபர் கைது!

            -MMH


கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் போலிசில் சிக்கிய நிலையில் கஞ்சா பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை அருகே சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துடியலூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது . இதனை தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் அங்கு ரகசியமாக சென்று பார்வையிட்டனர். அப்பொழுது இளைஞரொருவர் கஞ்சா விற்பது தெரியவந்த நிலையில் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.


அவரிடம் விசாரித்ததில் அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கோவையில் தங்கியுள்ள லிலியன் ஜெப் என்னும் 21வயது இளைஞர் இவர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றது தெரிய வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


ஒரு கிலோ 100 கிராம் வரையிலான கஞ்சா பறிமுதல் செய்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கோவையில் ரயில் நிலையம் விமான நிலையம் அருகே பேருந்து நிலையம் அருகே இதுபோன்று கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் போலீஸின் கண்காணிப்பில் தொடர்ந்து சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.


-போத்தனூர்,சீனி.


Comments