தேசிய தரவரிசைப் பட்டியலில்-பி.எஸ்.ஜி கல்லூரி!
-MMH
நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி 10 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அரசின் மத்திய மனித வளத்துறை, 2020-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப் படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள 1,659 கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.கற்றல்கற்பித்தல், பாடத்திட்டம் உள் கட்டமைப்பு, ஆராய்ச்சி, சிறந்த நடைமுறைகள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனம் குறித்த சமூக மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை முன்வைத்து அதன் அடிப்படையில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வெளியிட்ட தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரிவளாகத்தில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி, மற்றும் கல்லூரியின் இயக்குனர் பாலசுப்ரமிணியன், செயலாளர் யசோதாதேவி,முதல்வர் நிர்மலா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது எங்கள் கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம், கற்பித்தல், மற்றும் கற்றல் முறை என பல்வேறு சிறந்த கட்டமைப்புகளால் தேசிய அளவில் பத்தாம் இடத்தில் வந்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் கூடுதல் கவனங்கள் செலுத்தி மேலும் தர வரிசையில் முன்னேற்றம் காண கல்லூரியின் அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்ட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தேசிய அளவில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளதில் மகிழ்ச்சியளிப்பதாகவும், இது இக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்குப் பெருமை அளிப்பதாக தெரிவித்தனர்.
-போத்தனூர்,சீனி.
Comments