கோவையில் தனிமை படுத்தப்பட்ட பகுதிகள்..!

         -MMH


கோவை கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன கோவை மாநகராட்சி எல்லைக்குள் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரப் பிரிவினர் சென்றுப்ளீச்சிங் பவுடர்  மற்றும் கிருமி நாசினி தெளிக்கின்றனர் அப்பகுதியை தனிமைப் படுத்துவதாக அறிவித்து இரும்பு தகரங்களால் மறைத்து சீல் வைத்தனர்.


இதற்கு முன் செல்வபுரம் ஸ்ரீவத்சா அப்பார்ட்மெண்ட் நல்லம்பாளையம் விஜயா நகர் சின்னியம்பாளையம் ஆர் ஜி புதூர் ராஜவீதி பெரிய கடை வீதி கிராஸ்கட் ரோடு 3,4 வீதிகள் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு இருந்தன. நோய் தொற்று மேலும் பலருக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டதால் கணபதி, கரும்புக்கடை, பூங்கா நகர், பீளமேடு, கோபால் நாயுடு பள்ளி அருகில் மற்றும் எஸ் டி வி நகர், தெலுங்குபாளையம், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், வேலாண்டிபாளையம், காந்திபார்க், ஆர் எஸ் புரம்,  குனியமுத்தூர் சங்கீதா மருத்துவமனை சாலை,  ரத்தினபுரி, செல்வபுரம், ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், இடையார்பாளையம், சர்ச்வீதி, சவுரிபாளையம், சரவணம்பட்டி, ஜி கே எஸ் நகர், மற்றும் சூலூர் குமரன் நகர், செட்டிபாளையம், வடமதுரை, குருடம்பாளையம், சூலூர், ஏர்போர்ட், பெரியநாயக்கன்பாளையம், ரங்கநாயகி நகர், எல் ஜீ பள்ளி பின் புறம்,சேரன் நகர், ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பகுதிகளுக்கு செல்லும் பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.மேலும் மாவட்ட நிர்வாகமும் இந்த பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


-ஈஷா,குறிச்சி.   


 


Comments