தியாகத்தின் திரு உருவம் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
-MMH
உலக தந்தையர் தினம்! - இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. தாய்க்கு இணையாக அன்பு வழங்குவதில் தந்தைக்கு நிகர் தந்தைதான். தாயின் அன்பு தட்டில் வைக்கும் தீபம். தந்தையின் அன்பு பூமிக்குள் ஓடும் நீரோடை போன்றது . தாய் தன் குழந்தையை பத்து மாதம் சுமக்கிறாள். ஆனால் தந்தையோ காலம் உள்ளவரை தன் நெஞ்சில் சுமக்கிறார். குழந்தைகளுக்கு அறிவு ஊட்டுவது தந்தைக்கு நிகர் ரோல் மாடல் யாரும் இல்லை என்பது நிதர்சன உண்மை. ஒரு குடும்பத்தின் ஆணிவேர் தந்தைதான். ஒரு குடும்பத்தின் அனைத்து வழிகாட்டியும் தந்தைதான். தான் இருக்கும் வரை குடும்பத்திற்கு பாடுபடுவதும் தந்தை தான். ஒவ்வொரு வருடமும் ஜூன் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையாக தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. நாம் நம்முடைய தந்தைக்கு,அவர் நமக்கு அளித்த ''அன்பும் அரவணைப்பும்'' நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.இந்த நாளில் நாம் அனைவரும் சபதம் எடுப்போம்.அனைவரும் இன்னாளில் அப்படி ஒரு சபதம் எடுத்தால் எதிர் காலத்தில் முதியோர் இல்லம் இல்லா உலகை உருவாக்கலாம். இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..!
-S.கிரி,கோவை மாநகர் மாவட்டம்.
Comments