போத்தனூரில் பிரபல பல்பொருள் அங்காடிக்கு சீல்!
-MMH
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க முகக் கவசம் அணிவோம், சமூக இடைவெளியை கடைபிடிப்போம், கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் பல்வேறுவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில்,
கோவை போத்தனூரில் செயல்பட்டு வந்த டி மார்ட் பல்பொருள் அங்காடியில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் செயல்பட்டு வந்த நிலையில் மதுக்கரை வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதிரடியாக அந்த அங்காடிக்கு நேற்று சீல் வைத்தனர் மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத அனைத்து கடைகளையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
-பீர் முஹம்மது,திருப்பூர்.
Comments