கொரோனாவுக்கு மருந்தா..!
-MMH
தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா வைரஸ் அக்டோபர் மாதத்தில் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் இந்நிலையில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் கண்டுபிடித்த அந்த மாத்திரைக்கு ஃபேவிபிராவிர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாத்திரை ஒன்றின் விலை ரூ. 103 ஆகும். 200 மில்லிகிராம் அளவில் 34 மாத்திரைகள் கொண்ட அட்டையின் விலை ரூ. 3,500 ஆகும். லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு இந்த மாத்திரையை கொடுத்தால் 88% வரை குணமாகியுள்ளதாக கிளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதாஞ்சலி நிறுவனம் கொரோவை வெல்ல ஆங்கில மருந்தும் ஆயுர்வேத மருந்தும் போட்டிபோட்டு கொண்டு சந்தைக்கு வர உள்ளது இவ்விரு மருந்துகளிலும் எது சிறந்தது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.
Comments