கோவையில் தடை செய்யபட்ட பான்மசாலா பொருட்கள் பதுக்கல்!
-MMH
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் இவருக்கு சொந்தமான குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர் குடோனில் பதுக்கி வைத்திருந்த 586 கிலோ பான்மசாலா புகையிலை குட்கா ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு சுமார் 8 லட்ச ரூபாய் ஆகும் மேலும் விசாரணையில் அந்த குடோன் வாடகைக்கு எடுத்த காஜா ஷெரிப் கடந்த மூன்று மாதங்களாக புகையிலை பொருட்களை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்செல்வன் தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது மக்கள் புகார் கொடுக்கலாம் அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் புகார்கள் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ் அப் எண் 94440 42322.
-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.
Comments