ஒரே நாடு..! ஒரே ரேஷன் திட்டம்..!
-MMH
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது நிலையில் மாநிலத்தில் தூத்துக்குடி, நெல்லையில் சோதனை முறையாக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது அதன் தொடர்ச்சியாக வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த பணிகள் வரும் செப்டம்பருக்குள் நிறைவடையும் என்று கடந்த மாதம் மத்திய உணவு, பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி வழியாக ஆலோசனை நடத்திய போது அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-பொள்ளாச்சி M சுரேஷ்குமார்.
Comments