கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இருந்தவர் கொரோனா தாக்கி பலி!!!

          -MMH


கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் பலி 108 ஆம்புலன்ஸ் சேவையில் அவசர மருத்துவராக (இ.எம்.டி) பணிபுரிந்து வந்த இளைஞர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் அவசர உதவி மருத்துவ பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்தனிலையில் கடந்த ஜூன் 18ம் தேதியன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் தங்கியிருந்ததால் திருப்பூர் மாவட்ட பாதிப்படைந்தோர் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர், அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவரது உடலை பாதுகாப்பாக ஆத்துப்பாலம் மயானத்தில் அடக்கம் செய்தனர் இதை தொடர்ந்து அருகில் சிகிச்சை பெற்றுவந்த சில இளைஞர்கள் இவரின் மரணத்தினால் அச்சமடைந்து குறிப்பிடத்தக்கது.


-போத்தனூர்,சீனி. 


Comments