தமிழக,கேரள மக்கள் பயனடைய நவீன அணை!
-MMH
கேரளா பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுக்கா உட்பட்ட முத்துசாமிபுதூர் அருகில் மூலத்துறை அணை உள்ளது பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின்படி இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கேரளாவிற்கும் மற்றும் தமிழக விவசாயிகளும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த அணைக்கட்டு உடைந்து பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த அணைக்கட்டு நவீனமயமாக்கப்பட்ட இன்று திறப்பு விழா கண்டது கேரள முதல் மந்திரி திரு பிரனாய் விஜயன் காணொளி காட்சி மூலமாக இந்த அணையை இன்று மாலை திறந்து வைத்தார் இவ்விழாவினை நீர்வள துறை அமைச்சர் திரு கே கிருஷ்ணகுட்டி தலைமை தாங்கினார் மேலும் விவசாயத்துறை அமைச்சர் திரு வி எஸ் சுனில் குமார் காணொளி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார் மேலும் இவ்விழாவில் முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-பொள்ளாச்சி M சுரேஷ்குமார்.
Comments