சட்டம் சாமானியனுக்கா..! காவல் நிலையம் மறைத்து கட்அவுட் அரசியல்!
-MMH
தமிழக - கேரள எல்லைப் பகுதியான கேரள மாநிலத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் முத்துசாமிபுதூர் அருகே உள்ள மூலத்துறை அணைக்கட்டு கடந்த ஜூன் 20ஆம் தேதி கேரள முதல்வர் பிரனாய் விஜயன் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக ஆளுங்கட்சி எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் வைத்திருந்தனர் குறிப்பாக மீனாட்சிபுரம் காவல் நிலையம் முன்பு காவல் நிலையத்தை மறைக்கும் படியான ஒரு பிளக்ஸ்யை எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் வைத்திருந்தனர் இந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் ஆகிய நிலையிலும் கூட அதை அப்புறப்படுத்தாமல் அப்படியே உள்ளது பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு புதிதாக வருபவர்களுக்கு காவல் நிலையம் எங்கு உள்ளது என்று தெரியாமல் வழிமாறி சென்று விடுகின்றனர் பின்பு விசாரித்து மீண்டும் வருவதாக கூறுகின்றனர் மேலும் காவல் நிலையத்திற்கும் பொதுமக்களுக்கும் அது இடையூறாக இருப்பதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் கெட்டது நினைத்தால் கெடுதலே நடக்கும் என்ற சிந்தனையோடு,
-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.
Comments