பசியால் வாடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு -காங்கிரஸ் துணை நிற்கும்
-MMH
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களும், இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமென்று ஊரடங்கு ஆரம்பம் முதலே கூறிவந்தனர்.
ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பதில் மெத்தனம் காட்டி வந்தது. இந்த மெத்தனத்தின் விளைவு அனைவரும் உண்ண உணவு இல்லாமல் வறுமையிலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இன்னும் இக்கட்டான சூழ்நிலை என்னவென்றால் இந்த அரசை நம்பி பயன் இல்லாமல் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து செல்லக்கூடிய சூழ்நிலைக்கு வந்தனர்.
உண்ண உணவில்லாமல் பசியால் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து பல தொழிலாளர்கள் சாலை விபத்தில் இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை கல்நெஞ்சம் படைத்த நரேந்திர மோடி அரசாங்கம் எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதை என்னால் உணர முடியவில்லை . பல ரயில் நிலையங்களில் உண்ண உணவு இல்லாமல் பசியால் தொழிலாளர்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனது சொந்த ஊருக்கு செல்ல இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுகொள்ளும் என்று அறிக்கை கொடுத்தார்கள். காங்கிரஸ் கோரிக்கையை ஏற்காமல் மத்தியில் இருக்கக்கூடிய மோடி அரசாங்கம் ரயில் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட பணத்தை அரசு ஏற்கும் என்றும், ஒரு குறிப்பிட்ட பணம் மக்கள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதுவும் நடைமுறையில் இருந்ததாக தெரியவில்லை. நரேந்திர மோடி தலைமையிலான இந்த பாஜக அரசாங்கம் தானும் செய்யவில்லை செய்ய முன்வந்த காங்கிரஸ் கட்சியையும் செய்ய விடவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை .
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களே சிந்திப்பீர்!!!!
Dr A செல்லகுமார்.MP
தகவல்: மாரி
-MM ஹாரூன், A முகம்மது இஸ்மாயில்.
Comments