தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த மூன்று மாதம் அவகாசம்!
-MMH
பள்ளி கட்டணத்தை செலுத்த நிர்பந்தம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.
பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் மனு ஒன்று அளித்தார். அதில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட சொல்லி நிர்பந்தம் செய்வதால் பெற்றோர்கள் கடும் மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளதால் பள்ளி திறந்த பின் மூன்று மாத கால அவகாசம் அளித்து பணம் செலுத்தம் வகையில் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேணும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவத்காகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.தனியார் பள்ளி நிர்வாகத்தை அழைத்து பேசி தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்த போது அவ்வமைப்பின் உறுப்பினர்கள் ராதா மற்றும் குமார் உடன் இருந்தனர்.
-போத்தனூர் சீனி.
Comments