தமிழர்களின் துயரத்தை போக்கிய கேரள அரசு!

              -MMH


நமது நாளைய வரலாறு புலனாய்வு  இதழில் ''தமிழகத்தை வஞ்சிக்கிறதா  கேரளம்'' என்ற தலைப்பில் மூலத்துறை அணைக்கட்டு பற்றிய செய்தி நம் வெளியிட்டு இருந்தோம், அதன் தொடர்ச்சியாக அணைக்கட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது..! 


  தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முத்துசாமிபுதூர் மூலத்துறை அணைக்கட்டு இது கேரள மாநிலத்திற்கு உட்பட்டது இந்த அணை சீரமைப்புக்காக 46.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது நான்கு ஆண்டுகளாக அணை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இப்பொழுது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


 


அணைக்கட்டு உடைந்த நிலையில் உள்ள பழைய  புகைப்படம்.  


 கேரள மாநில நீர்வள பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மேற்பார்வையில் நீர்வள பாசனத்துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் முன்பு இந்த அணைக்கட்டில் 13 மதகுகள் மட்டும் இருந்தன இப்பொழுது 6 மதகுகள் கூடுதல் செய்யப்பட்டுள்ளது மொத்தம் 19 மதகுகள் உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் இன்னும் சில வாரங்களில் இறுதிகட்ட பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் முத்துசாமிபுதூர் மூலத்துறை அணைக்கட்டின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.



   1974 ஆம் ஆண்டு கேரள மாநில அரசு கட்டிய அணை கட்டு தான் முத்துசாமிபுதூர் மூலத்துறை அணைக்கட்டு 1979 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதியன்று இந்த அணை முதல் முறையாக உடைந்தது உடனே மாநில அரசு அணைக்கட்டை புதுப்பித்தது. 1992 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மீண்டும் இந்த அணை உடைந்தது மீண்டும் மாநில அரசு அணையை கட்டியது.


  2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி அணை மீண்டும் உடைந்தது மீண்டும் மாநில அரசு அணையை கட்ட முன் வரவில்லை இனி தற்போதைக்கு இந்த அணைக்கட்டு உடையாது ஏனெனில் கட்டினால் தானே உடையும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று கேரள மாநில அரசு கிடப்பில் போட்டு விட்டது.



 இதனால் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொழிஞ்சாம்பாறை, வடகரபதி, எருதேன்பதி, நல்லேப்பிள்ளி,ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விவசாயம் இவைகளுக்கு மூலத்துறை அணைக்கட்டிலிருந்து RBC வாய்க்கால் வழியாக ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் அணைக்கட்டு உடைந்து இருந்த நிலையில் இத்தனை ஆண்டுகாலம் தண்ணீர் இருந்தும் தர முடியவில்லை தண்ணீருக்காக தவமாய் தவமிருக்கும் மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் காத்திருக்கிறது.


 இந்த அணைக்கட்டை புதுப்பித்து பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது அதே போல் கோபாலபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் பாதையில் முத்துசாமிபுதூர் அருகில் ஆற்றின் குறுக்கே நில பாலம் ஒன்று வருகிறது இந்தப் பாலம் மிகவும் தாழ்வாக உள்ளது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் நிலப் பாலம் மூடிவிடும் இதனால் வேலைக்கு செல்வோர் வாகன போக்குவரத்து தடைபடும் அதனால் நில பாலத்தை உயர்த்தி கட்டித்தர வேண்டும் என கேரள அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள் முத்துசாமிபுதூர் பொதுமக்கள் மேலும் அவசர காலங்களில் அணைக்கட்டின் பாதையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்தே வைத்திருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுகிறது.



 ஒவ்வொரு குடிமகனுக்கும் தூய்மையான தண்ணீரை போதுமான அளவு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் அதற்கேற்ப நீர் நிர்வாகம் செம்மைப்படுத்த படவேண்டும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யக்கூடிய வகையில் அரசின் நிர்வாக நடவடிக்கை அமைய வேண்டும் இத்தகைய முக்கியமான கொள்கை முடிவுகளை வகுக்கும் போது கிராம பஞ்சாயத்து அளவிலிருந்து தேசிய அளவு வரை விவாதம் நடத்தப்பட வேண்டும்.


-பொள்ளாச்சியிலிருந்து,


நாளைய வரலாறு நிருபர் M.சுரேஷ் குமார்.


Comments