கோவையில் இனி சிறுவர்கள் பட்டம் விட்டால்,பெற்றோர்கள் கைது!

                -MMH 


     சிறுவர்,சிறுமியர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி எச்சரிக்கை.


            கோவை மாவட்டத்தில் சிறுவர்,சிறுமியர்கள் பட்டம் விட்டு விளையாடுவதை தவிர்க்க வேண்டும் .இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.மீறினால் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


       கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கடந்த சில  நாட்களாக பட்டம் விட்டு விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்த வண்ணமாக உள்ளன.இவ்வாறு பட்டம் விட்டு விளையாடுவதால் பட்டம் அறுந்து அருகில் உள்ள உயரழுத்த மின் பாதையில் சிக்கிவிடுகிறது.இதன் காரணமாக மின்தடை ஏற்படுத்துவதுடன்,மின்சார வாரியத்திற்கு இது பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது.அத்துடன்,சாலையில் செல்லும் போது பயணிகள் மீது பட்டத்தின் கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது.



        எனவே மின்தடை மற்றும் மின் விபத்து ஏற்படாமல் இருக்கவும்,உயிரிழப்பு போன்ற பாதிப்புகளை தவிர்க்கவும்,பட்டம் விட்டு விளையாடுவதை சிறுவர்கள்,சிறுமியர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.சிறுவர்கள் பட்டம் விடாமல் அவர்களின் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.அதையும் மீறி சிறுவர்கள் பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.


-ஸ்டார் வெங்கட்,சுரேஷ்குமார்,ஈஷா. 


Comments