இனி ஸ்விக்கியில் மதுபானங்களை ஆர்டர் செய்யலாம்!
-MMH
உணவு விநியோக ஆப் ஆன ஸ்விக்கி நிறுவனம், ஜார்கண்ட் அரசாங்கத்திடம் தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பின்னர் ராஞ்சியில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. வீட்டு வாசலியேயே மதுவைப் பெறுவதற்கான செயல்முறை ஆனது ஸ்விக்கி பிளாட்பார்மில் மளிகைப் பொருட்களை வாங்குவதைப் போன்றது தான். ஆனால் அது 'Wine Shops' (ஒயின் ஷாப்ஸ்) என்ற புதிய பிரிவின் கீழ் நடக்கும்.
ஸ்விக்கி வழியாக மதுபானம் வாங்குவோர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டி சில கட்டாயமான சரிபார்ப்புகள் (mandatory verifications) உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். அனைத்து ஆர்டர்களும் ஒரு தனித்துவமான OTP ஐக் கொண்டே நிகழும். குறிப்பிட்ட ஒடிபி-ஐ டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளரால் காட்டப்பட வேண்டும். ஒரு வாடிக்கையாளர் மாநில சட்டத்தின்படி ப்பட்ட வரம்பை விட ஆல்கஹால் ஆர்டர் செய்யக்கூடாது, செய்ய முடியாது. இந்த சேவையைப் பெற, ராஞ்சியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்விக்கி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதாஹ்ன் வழியாக 'ஒயின் ஷாப்ஸ்' பிரிவை அணுக முடியும்!" என்று ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வழியிலான மதுபான விற்பனைக்கு ஸ்விக்கி அறிவித்துள்ள சரிபார்ப்பு செயல்முறை மிகவும் எளிது. உங்கள் வயதை சரிபார்க்க உங்களிடம் ஒரு அரசாங்க ஐடி தேவை. அந்த ஐடியை உங்கள் கையில் பிடித்தவாறு ஒரு செல்பீ எடுத்து அதை ஸ்விக்கி ஆப்பில் பதிவிட வேண்டும். நீங்கள் ஆன்லைனில் எத்தனை பாட்டில்களை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும், அதுவும் சரிபார்க்கப்படும். பின்னர் உங்கள் ஆர்டரைப் பெற்றதும் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய OTP-ஐ ஆப் வழியாக பெறுவீர்கள், அவ்வளவுதான்.
ஆனால் ஆன்லைன் வழியாக மதுபான விற்பனைக்காக ஸ்விக்கி நிறுவனம் எவ்வளவு சார்ஜ் செய்யும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. ஸ்விக்கி நிறுவனம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய முதல் நகரம் ராஞ்சி ஆகும். தேவையான அரசாங்க ஒப்புதல்களைப் பெற்றபின், இந்தியா முழுவதிலும் உள்ள பிற நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தும் என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. மதுபானங்களை ஹாம் டெலிவரி செய்ய தொடங்க ஏற்கனவே பல மாநில அரசாங்கங்களுடன் மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் ஹோம் டெலிவரி ஒரு வாரத்திற்குள் தொடங்கலாம்.
ஸ்விக்கி ராஞ்சி நகரில் தொடங்கி, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வழியில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்வதாக கூறுகிறது. கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்க்கும் மற்றும் சமூக தூரத்தை ஊக்குவிக்கப்பதற்க்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றும் ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.
-சுரேஷ்குமார்.
Comments