குவாட்டருக்கு சண்டை -கணவன் தாக்கி மனைவி பலி!
-MMH
பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த திவான்சாபுதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் வயது 62 தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி ஆவார் இவருடைய மனைவி பழனாள் வயது 57 இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் இவர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள மதுக் கடைக்குச் சென்று 6 மதுபாட்டில்களை மாணிக்கம் வீட்டுக்கு வாங்கி வந்துள்ளார் ஒரு மது பாட்டிலை கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து குடித்துள்ளனர் பாட்டில்களை இருவரும் பகிர்ந்து கொள்வதில் பிரச்சனை எழுந்துள்ளது தனக்கு மூன்று பாட்டில்கள் வேண்டும் என மனைவி கேட்க தர மறுத்த கணவன் இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது பின்பு சமாதானமாகி இருவரும் மதுபாட்டில்களை பகிர்ந்து குடித்துள்ளனர் மீண்டும் வாய்த்தகராறு தொடங்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் ஆத்திரமடைந்த கணவன் அருகிலிருந்த கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார் பின்பு மனைவி என்றும் கூட பாராமல் சுவற்றில் தலையை ஓங்கி அடித்துள்ளார் இதில் பலத்த காயமடைந்த பழனாள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனையடுத்து மாணிக்கம் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார் இதை அறிந்த வால்பாறை சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிமற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர் பின்பு இறந்து கிடந்த பழனாளை பிரதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாணிக்கத்தை தேடி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது.
6 மதுபாட்டில்கள் ஒரு உயிரை கொன்று உள்ளது என்றால் தினமும் எத்தனை மது பாட்டில்கள் எத்தனை உயிர்களை காவு வாங்கும் என்று தெரியவில்லை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மதுவை மறப்போம் மனிதனாய் வாழ்வோம் என்ற சிந்தனையோடு.
-M.சுரேஷ்குமார் பொள்ளாச்சி
Comments