ரஜினியின் பேச்சு வட்டம் மாவட்டம் சதுரம் செவ்வகம் என்று


மார்ச் 12/03/2020 ரஜினியின் பேச்சு 100 க்கு 75% அவர் சொன்னது போல் மாற்றம் என்றால் இப்டிதான் உருவாக வேண்டும்


இந்த ஊடகங்கள் தான் திரைப்படத்தில் பேசும் ஒரு டயலாக்கை வைத்து கொண்டு நீங்க எப்ப அரசியலுக்கு வருவிர்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கின்றன இதே ஊடகம்


என்றாவது அதானி அப்பானியை அரசியலுக்கு அழைத்து உண்டா ? சினிமாவில் அந்த ஹீரோவின் கேரேட்டர் பேசும் வசனம் மட்டுமே அது அதை எழுதியது யாரோ அதை நாம் நேசிக்கும் நாயகன் பேசி விட்டால் அது அவரே பேசியது போல் கொண்டாடுவது நமக்கு இழுக்கு ?



ரஜினியின் பேச்சு வட்டம் மாவட்டம் சதுரம் செவ்வகம்


நம் அறியாமை கூட அது இருக்கலாம் ரஜினி இன்று பேசியதில் பல உன்மையை சொல்லி இருக்கார் ஆம் தன் வயது தன் உடல்நிலை தன்னால் முதல்வராக சமாளிக்க இயலாத பல விஷயங்களை தெளிவாக விளக்கி விட்டார்


முதல்வர் பொருப்பு அவ்வளவு எளிது அல்ல அப்டி என்றால் பன்னிர் செல்வம் எடப்பாடி எப்டி நடத்துகிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே நமக்கு வரும் உண்மை தான் அவர்கள் செய்வது 100% அரசியல் அல்ல அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு ஊழல் அதிகாரம் சம்பாத்தியம் என்று இன்று அரசியலை தொழிலாக மாற்றி விட்டார்கள்


ரஜினி விரும்புவது அந்த அரசியல் அல்ல அவர்கள் கொண்டு வர விரும்புவது உண்மை நேர்மை என்ற அரசியல் உண்மையில் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நாம் இதை ஏற்று கொள்ளதான் வேண்டும் இன்று ரஜினி பேசியசில் எல்லாம் ஏற்று கொண்டாலும் தான் ரஜினி என்பதற்கு ஒரு க்கனா வைத்து பேசியதுதான் ஒரு வருத்தம் ஆம் எழுச்சி வந்தால் வருவேன் ?


எழுச்சி எப்ப வரும் நம் மண் களவு போனது எழுச்சி வரவில்லை கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டது எழுச்சி வரவில்லை குடிநீர் சாலை நாடுகெங்கும் ஊழல் எழுச்சி வரவில்லை இனி எப்டி யார் கொண்டுவருவது எழுச்சி ?


இதான் ரஜினி நமக்கு கொடுத்த பெரிய ஏமாற்ற பேச்சு அவர் அரசியல் ப பிரச்சின சரி எழுச்சி எப்டி வரும் ஒரு உதாரணம் இன்று தஞ்சாவூர் கோயில் எப்டி பிரமாண்டமாக இருக்கு இது என்ன மக்களின் எழுச்சியா ?


எதற்கும் ஒரு முன்னோடி வேண்டும் அதை அன்று முன்னெடுத்து சென்றார் ராஜ ராஜ சோழன் அதான் இன்று வரை அந்த கோயில் பேசப்பட்டு கொண்டு இருக்கு ரஜினி சொல்வது நீ முதலில் எழுந்து வா பிறகு நான் வருகிறேன் இது சாத்தியமா ரஜினி சொல்லும் எழுச்சி சாத்தியமா ?


முடிவு மக்கள் கையில் .. எது எப்படியோ மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று கேள்வி தொடர்கிறது 


நாளைய வரலாறு


-M.சுரேஷ்குமார் பொள்ளாச்சி.                                                                                   -MMH


Comments