சீனா நமக்கு உணர்த்தும் பாடம்


டந்த பத்து வருடங்களில் உலகமே வியக்கும் அளவு கட்டுமானம் , உற்பத்தி, ராணுவம் என சகல துறையிலும் அபார வளர்ச்சி பெற்றது சீனா. ஆனால் உணவுப் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் நெறிமுறைகள் என எதையும் சரியாக கடைப்பிடிக்காத காரணத்தால் கொரானா வைரஸ் என்ற கொடிய நோயால் ஆயிரக்கணக்கான மக்களைப் பலிகொடுத்து கொண்டிருக்கிறது.



அந்த குறிப்பிட்ட மகாணங்களில் இருந்து வரும் வீடியோக்கள் அதிர வைக்கின்றன. ஆம் ! நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அங்கே கிடந்து சாகும் நிலையில் மாகாணம் 'சீல்' வைக்கப் பட்டிருக்கிறது. அங்கு நிலவி வரும் 4-5 டிகிரி கடும் குளிர் நோயை வேகமாக பரப்பி வருகிறது. சீதோஷண நிலை மாறினால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்பதே இன்றைய நிலை.


வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் நம் நாட்டிலே நம் முன்னோர்கள் எந்த மாதத்தில் விரதம் இருக்க வேண்டும், கூழ் குடிக்க வேண்டும், வேப்பம்பூத் தின்ன வேண்டும் , அசைவம் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் சும்மாவா சொல்லி வைத்தார்கள். ஒவ்வொரு கடவுளின் பெயரால் மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அந்த சாதுர்யத்தை என்னவென்று சொல்ல!மனிதனை மனிதனாக மாற்றும் நெறிமுறையே ஆன்மீகமே.



நாட்டிலாகட்டும் வீட்டிலாகட்டும் நல்லதொரு கலாச்சாரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கட்டமைக்கப் படாத வளர்ச்சியால் பயனில்லை என்பதே சீனா நமக்கு உணர்த்தும் பாடம். ஆனால் இங்கே நமக்கு கலாச்சாரமும் பண்பாடும் மதம் சார்ந்தே இருக்கிறது. கடவுள் மறுப்பு கொள்கையாளர்களும் ஆன்மீகத்தை விமர்சனம் செய்பவர்களும் ஒன்றை உணர வேண்டும்.


உண்மையில் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்புக் கொள்கையல்ல. அது உண்மையான ஆன்மீகத்தை அறிவதே ஆகும்........


இறையருளுடன்,


Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.                                                        -MMH


 


Comments