கனிம வளங்கள் கடத்தல்
கேரள மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க ஆறுகளில் மணல் அள்ளவும், கல்குவாரிகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மணல் கருங்கல் உள்ளிட்ட கனிமவளங்களை அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தி வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம் மீனாட்சிபுரம் ஆனைமலை வழியாகவே அதிகளவில் கனிமவளங்களை கேரளாவுக்கு கொண்டு சொல்கிறார்கள்.
கேரளாவில் இருந்து டாரஸ் ரள மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க ஆறுகளில் மணல் அள்ளவும், கல்குவாரிகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மணல் கருங்கல் உள்ளிட்ட கனிமவளங்களை அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தி வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம் மீனாட்சிபுரம் ஆனைமலை வழியாகவே அதிகளவில் கனிமவளங்களை கேர எனப்படும் லாரிகள் தமிழகத்திற்கு வந்து பெரிய அளவிலான கருங்கற்களை எந்தவிதமான தடையும் இன்றி கேரளாவுக்கு கடத்தி செல்கின்றனர் அதே சமயம் டிப்பர் லாரிகளில் 17 டன் எடையுள்ள பொருட்களை தான் கொண்டு செல்ல வேண்டும் என்பது விதிமுறை ஆனால் 30 டன் வரை கருங்கற்களை ஏற்றிச் செல்கின்றனர் இந்த லாரிகள் வழித்தடத்தில் மிக வேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த கடத்தலில் நூற்றுக்கு அதிகமான டிப்பர் லாரிகள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள் தமிழகத்திலிருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தி வரும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருவதால் இந்நிலையில் கனிமவளங்கள் கடத்தல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
மகிழ்ச்சியாக இருக்கும்போது ஒரு மரக்கன்று நடுங்கள் என்ற நல்ல சிந்தனையோடு.
நாளைய வரலாறு, எம் சுரேஷ் குமார் பொள்ளாச்சி
Comments