கஞ்சா விற்பனை சிக்கன் கடை ராஜேஷ் கைது
தமிழக - கேரள எல்லைப் பகுதியான, சித்தூர் தாலுக்கா பொள்ளாச்சி தாலுக்கா எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பது இங்கு வசிக்கும் மக்களின் மனதில் வேதனையளிக்கிறது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கும் கேரளத்திலிருந்து தமிழகத்திற்கும் கடத்தல் பொருட்களை சர்வசாதாரணமாக கடத்திக் கொண்டு இருக்கிறார்கள் கேரளாவையும் தமிழகத்தையும் இணைக்கும் மையப்பகுதி மீனாட்சிபுரம் என்பதால் சில சமூக விரோதிகள் இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக மீனாட்சிபுரம் எல்லை காடு அருகே ஒரு தென்னந்தோப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை அறிந்த பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர் அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சிபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சிக்கன் கடை ராஜேஷ் என்பவரை கைது செய்தனர், அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் இவர் பல மாதகாலமாக கஞ்சா தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தனி ஒருவராக இந்த தொழிலை செய்ய முடியாத காரணத்தால் மேலும் இவருக்கு துணையாக இருந்த சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள் இவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-MMH
Comments