நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் கட்சி
நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் கட்சி ஆரம்பிக்கவேமாட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், தனது படம் தொடர்பான விழாக்களில் மட்டும் ரஜினி அரசியல் பேசுவது வாடிக்கையாகிவிட்டதாக முத்தரசன் விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை அவரது ரசிகர்களே கைவிட்டுவிட்டார்கள் என்றும், இதனால் ரஜினி கட்சி தொடங்குவது சாத்தியமல்ல எனவும் கூறியுள்ளார். வருமான வரி விவகாரத்தை திசைதிருப்பவே திடீரென்று செய்தியாளர்களை சந்தித்து, குடியுரிமை சட்டம் தொடர்பாக ரஜினி பேட்டி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவாரா மாட்டாரா என விவாதங்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் முத்தரசன் கூறிய இந்த கருத்து கவனிக்கத்தக்கது.ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என கராத்தே தியாகராஜன், தமிழருவி மணியன் போன்றோர் கூறும் நிலையில் அதனை மறுக்கும் வகையில் முத்தரசன் இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரை ரஜினிகாந்துக்கு எதிராக பெரியளவில் கருத்துக்கூறாத கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது ரஜினியை எதிர்க்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அரசியலுக்கு வரமாட்டார் என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சரியான பதில் இன்னும் கூறாத ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கிறது. -MMH
Comments