பொள்ளாச்சி மீன்கரை சாலை எப்போதும் பரபரப்பாக


பொள்ளாச்சி மீன்கரை சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு முக்கிய சாலை ஆகும் இச் சாலையின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் சாலையாகும்.


இந்த சாலையில் தற்போது சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது இதனால் ரோட்டின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது சரியான பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது மேலும் இந்த தருணத்தில் சாலையோரம் இருக்கும் புளிய மரங்களில் புளியங்காய் அடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது மீன்கரை சாலையில் இந்த இரண்டு பணிகளும் நடைபெற்றுவரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.



இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுவதால் காவல்துறை அதிகாரிகள் சரியான நேரத்துக்கு வந்து சேர தாமதமாவதால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே சண்டை தீவிரமாகிறது இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது மேலும் இந்த சாலை வழியாக பயணிப்பதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர் இந்த முக்கியமான சாலையை 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறிவருகின்றனர்.


-M.SURESH KUMAR.                                                                                                        -MMH


Comments