காக்கி இருக்க பயம் எதற்கு மாமிச கடையில் மது விற்பனை
அடைக்கப்பட்டிருக்கும் மதுபானக்கடை.
71 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் இவ்விழாவின் சிறப்பை கருத்தில்கொண்டு தமிழக அரசு மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறையை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு சில சமூகவிரோதிகள் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகிறார்கள் இந்த மது விற்பனைக்கு சில முக்கிய அரசியல் புள்ளிகளும் சில போலீஸ் அதிகாரிகளும் துணை நிற்பதாக மக்கள் புலம்புகிறார்கள்.
அம்பராம்பாளையம் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த கடை.
பொள்ளாச்சி அடுத்து அம்பராம்பாளையம் என்ற பகுதியில் மீன்கரை ரோட்டில் சுகுணா சிக்கன் பாபு பிராய்லர்ஸ் என்ற சிக்கன் கடையில் அதிகாலை முதல் மது பாட்டில்கள் அமோகமாக விற்பனை செய்து வருகிறார்கள் என்ற செய்தி அறிந்த அங்குள்ள பொதுமக்கள் ஒன்றுகூடி அக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இனிமேல் கடையில் மது பாட்டில்கள் விற்கக்கூடாது என்றும் மீறும் பட்சத்தில் மதுபாட்டில் விற்கும் கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் என நல்ல சிந்தனையோடு.
நாளைய வரலாறு
சுரேஷ்குமார் பொள்ளாச்சி. -MMH
Comments