போலி பத்திரிகையாளர்கலின் தகவல் சேகரிப்பு


மிழகம் முழுவதும் போலி பத்திரிகையாளர்கள் மீதான வழக்கு விவரங்கள் சேகரிப்பு ஐகோர்ட்டில், போலீஸ் தகவல சிலைக்கடத்தல் வழக்கு களை விசாரிக்க ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர், பத்திரிகையாளர் என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.


அதன்படி, மனுதாரர் தாக்கல் செய்த அடையாள அட்டைகளுக்கு இடையே சிலை கடத்தல் புகாரில் சிக்கி பணி இடைநீக்கத்துக்கு ஆளான துணை போலீஸ் சூப்பிரண்டு காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், 'போலீஸ் அதிகாரியின் அடையாள அட்டை மனுதாரர் வசம் வந்தது எப்படி?' என்ற கேள்வி எழுப்பினர்.


கால அவகாசம்.


மேலும், "பத்திரிகையாளர் என்ற போர்வையில் பல மோசடி பேர்வழிகள் உலா வருவதாகவும், இந்த கருப்பு ஆடுகளை பத்திரிகை துறையில் இருந்து வெளியேற்றும் நேரம் வந்து விட்டது”. இந்த போலி பத்திரிகையாளர்களை களை எடுக்கும் நேரம் வந்து விட்டது' என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்களின் விவரங்களையும் அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றும், போலி பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் எத்தனை உள்ளன? என்றும் போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அதேபோல, பத்திரிகையாளர் சங்கங்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் அவர்களுக்கு சென்றடையவில்லை என்று நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, அந்த நோட்டீசை வாட்ஸ் அப், இ-மெயில், கூரியர் மூலம் அனுப்ப உத்தரவிட்டனர்.


வழக்குகள் சேகரிப்பு.


 



போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் "தமிழகம் முழுவதும் போலி நிருபர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக சேகரித்து வருகிறோம். இந்த பணியில் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, போலி பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு கால அவகாசம் வழங்கினர்.


இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டு தொழில் அதிபர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் பலர் மிரட்டியும், குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, இதுபோன்ற நபர்களின் பத்திரிகைகள் எவ்வளவு விற்பனை செய்யப்படுகிறது? இவர்களது பத்திரிகை வெளியான நாள் முதல் எவ்வளவு வருமான வரி செலுத்தியுள்ளனர்? இவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது? அவர்கள் உண்மையான பத்திரிகையாளர்களா? அவர்களுக்கு எந்த வழியில் வருமானம் வந்தது? என்பது உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்க சிறப்பு குழுவை அமைப்போம்.


பத்திரிகையாளர்கள் மனு.


இந்த வழக்கில் சத்தியா ரவிசங்கர் உள்பட பல பத்திரிகையாளர்கள் தங்களையும் மனுதாரர்களாக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். உண்மையான பத்திரிகையாளர்களின் நலனை காக்கவும், இந்த ஐகோர்ட்டுக்கும் உதவவும் உள்ளோம் என்று கூறியுள்ளனர். எனவே, இவர்களது மனுக்களை, ஐகோர்ட்டு பதிவுத்துறை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இந்த வழக்கை வருகிற பிப்ரவரி 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


                                                                                                                              -MMH


Comments