காத்திருந்து தமது வேட்பு மனுவைத் தாக்கல் கெஜ்ரிவால்


6 மணி நேரம் காத்திருந்து தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ரோமேஷ் சபர்வாலை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக சுனில் யாதவ் போட்டியிடுகிறார். மும்முனைப் போட்டி இருந்த போதும் இத்தொகுதியில் மூன்றாவது முறை வெற்றிபெறும் நம்பிக்கையுடன் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நேற்று அவர் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்ய வந்த போது 35 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யக் காத்திருந்தனர்.



ஆனால் அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாததால் பலமணி நேரமாக இழுபறி நீடித்தது. இதனால் கெஜ்ரிவால் 6 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.பாஜக வேண்டும் என்றே தமது மனுத்தாக்கலை தாமதப்படுத்தியிருப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.                                                                                                                             -MMH


Comments